தியாகியின் ஒரு கோடி:ஒருவாறாக கோத்தாவிடம் சென்றது!

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வறுமை காரணமாக சிங்கள அரசியல்வாதிகள் மறுதலித்துவர யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி எனப்படும் தியாகேந்திரன் எனும் வர்த்தகர் ஒரு கோடி பணத்தை இராணுவம் ஊடாக கோத்தபாயவிடம் வழங்கியுள்ளார்.

தனது மாத சம்பளத்தை வழங்க முடியாது என ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்கவே தெரிவித்துள்ளார்.

ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை வழங்கினாலும் தன்னால் அப்படி வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு 300 மில்லியன் ரூபா கடன் இருப்பதாகவும் மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விவசாயம் செய்தே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆளும் தரப்பைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர் தமது சம்பளத்தை வழங்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தியாகி எனப்படும் தியாகேந்திரன் முன்னதாக இதே போன்று ஒரு கோடியை கோத்தாவிடம் சேர்ப்பிக்க வழங்கிய போது அமைச்சர் ஒருவர் அதனை தனது பெயரில் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இராணுவம் மூலம் வழங்கியுள்ளார்.


No comments