கொரோனா தொற்றாளி மனைவி தேடியோட்டமாம்!


யாழ்ப்பாணத்தில் உயிரிழப்போர் அனைவரது உடலங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவருகின்றமை யாழில் கொரோனா சமூக தொற்றாகியுள்ளதாவென்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

கொடிகாமத்தில் நேற்று விபத்தில் படுகாயமடைந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த வயோதிபப் பெண் இன்று உயிரிழந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது

இதனிடையே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து 33வயதுடைய கொரோனா தொற்றாளர் தப்பியோடியுள்ளார்.

நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில் அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக காணப்படுகின்றார். குறித்த நபர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கொரோனா தொற்றாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த கொரோனா தொற்றாளர் இன்று மதியம் அவரது வீட்டிற்கு தப்பியோடியுள்ளார். அதன் பின்னர் மனைவி அவரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து விட்டுள்ளார்.

மனைவியை விட்டு பிரிந்து வாழ முடியாத நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து அவர் தப்பியோடியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.No comments