சடலங்கள் அநாதரவாக:கிளிநொச்சியில் வெளியே சந்தை!



கம்பஹா மாவட்டத்தின் வத்துப்பிடிவல ஆதார வைத்தியசாலையின் பிணவறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக வீதிகளில் சடலங்கள் பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நாட்டின் சில நகரங்கங்களின் வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் முதல் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிளிநொச்சி பொதுச்சந்தை இன்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் தெரிவித்திருந்தார்.

சந்தை மூடப்பட மக்கள் வெளியே நிற்பதான புகைப்படங்கள் மூலம் சந்தையை பூட்டி பிரயோசனமில்லையென்பதை அம்பலப்படுத்தியுள்ளனர் ஊடகவியலாளர்கள்.



மேலும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை இன்று முதல் எதிர்வரும் 7 தினங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் சிலருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்கள் நாளைய தினம் முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் மூடப்படவுள்ளன.

வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், நீர்கொழும்பு நகர சபைத்தலைவருக்குமிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments