தனியே தன்னந்தனியே?

இலங்கை அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் சில, தனித்தனியாக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினேஸ் குணவர்த்தன தலைமையின் மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி,  வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியவை இவ்வாறு சந்திப்பில் ஈடுபட்டுள்ளன.

நேற்றைய தினம் இந்த சந்திப்புகள்  தனித்தனியாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனிடையே நாட்டை முழுமையாகவோ, பகுதியளவிலோ முடக்கவேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுத்தியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சாதாரண மக்கள் தொடர்பில் ஆகக்கூடுதலான கவனத்தை செலுத்தவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.

அக்கடிதத்தின் பிரதியை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் அனுப்பிவைத்துள்ளாராம்.
No comments