30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது!


இலங்கை இன்று10 மணியிலிருந்து 30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது. அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறும்.

மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை ஒருவாரத்துக்கு முழுமையாக முடக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

இதுதொடர்பில், மகாநாயக்கர்களுக்கு தெளிவுப்படுத்தியதன் பின்னர், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உத்தியோபூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, இன்றிரவு 10 மணிமுதல் நாடு முடக்கப்படும் என சுகாதார அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஆனால், அத்தியாவசிய சேவைகள் யாவும் இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments