சர்வாதிகார ஆட்சி: சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளது!

நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும்

முழுமையடைந்துள்ளதாக என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வெள்ளிக்கிழமை சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற அரசின் அடக்கு முறைகளுக்கு எதிரான  எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத் தில்  பங்கேற்ற பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக ரீதியில் தேர்தல் ஒன்றுநடைபெறும்போது வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்குமிடையில் எழுத்தில் அடங்காத உடன்பாடு ஒன்று எட்டப்படுகின்றது. 

நாம் உங்களுக்கு வாக்களித்து நீங்கள் வென்றால் எமது பிரச்சினைகளை பேச வேண்டும். அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். அதிகாரம் கிடைத்த பின்னர் எம்மை விரட்டக் கூடாது என வாக்களர் வேட்பாளர்களுடன் உடன்பாடு செய்கின்றனர்.

வேட்பாளர்களும் இந்த எழுத்தில் அடங்காத உடன்பாட்டை ஏற்றுக் கொண்டு, நாம் வென்றால் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்போம்,   சுயநலம் கருதி செயற்பட மாட்டோம். உங்களுடன் ஒன்றாக நிற்போம் என்று கூறுகின்றனர். இதுதான் ஜனநாயகத்தின் தாற்பரியம் .

ஆனால் இவாறு வாக்காளர்களுக்கு வாக்குறுதி கொடுத்து வென்ற பின்னர் மக்களை மறந்து,அவர்களுடனான உடன்பாடுகளை மீறி ஜனநாயகத்துக்கு முரணாக செயற்படத்  தொடங்குகின்றனர். என்றார்.

No comments