நாளை மறுநாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!!


இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும், பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தீர்மானத்தினை நிறைவேற்றிய நாடுகள் பிறிதொரு தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments