மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கொழும்பை வந்தடைந்தன!!


சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலைபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (பிஐஏ) இரண்டு வானூர்திகளில் வந்ததாக தேசிய விமான நிறுவனமான இலங்கை ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதில் இதுவே மிகப்பொிய அளவாகும். மார்ச் 31 அன்று 600,000 டோஸ் வழங்கப்பட்டதிலிருந்து இதுவரை சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியின் மொத்தம் 7.1 மில்லியன் டோஸ்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

No comments