கோபா அமொிக்கக் கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்ரினா


நேற்று சனிக்கிழமை நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 28 ஆண்டுகளின் பின்னர் வெற்றிக்கிண்ணத்தைத் பெற்றது.

பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா உதைபந்தாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்ஜென்டினாவின் வெற்றி கோல் 22 வது நிமிடத்தில் ரோட்ரிகோ டி பால் ஏஞ்சல் டி மரியாவுக்கு நீண்ட பந்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து டி மரியா அந்த கோலை அடித்தார்.33 வயதான மரியா நீண்ட பந்துப் பரிமாற்றத்தில் கிடைத்த பந்தை பாதுகாப்பா கட்டுப்பத்தி அதை பிரேசில் பந்துக் காப்பாளருக்கு மேலாக தூக்கிப் போட்டு கோலைப் போட்டார்.

விளையாட்டின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி கூடுதல் அடுத்தம் கொடுத்து விளையாடிபோதும் அவர்களால் இலக்கை அடைமுடியவில்லை. அவர்களுக்கு 2 கோல்களைப் போடும் வாய்ப்புக் கிடைத்தும் அதை ஆர்ஜென்ரினா பந்துக்காப்பாளர் தடுத்துவிட்டார்.

ஆர்ஜென்டினாவின் ஸ்ட்ரைக்கர் லியோனல் மெஸ்ஸிக்கு விளையாட்டின் இரண்டாவது பாதியில் கோல்போடுவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அவர் அதைத் தவறவிட்டிருந்தார்.

ஆர்ஜென்டினாவின் வெற்றி ஸ்ட்ரைக்கர் லியோனல் மெஸ்ஸிக்கு கிடைத்த முதல் குறிப்பிட்ட வெற்றியாகும். போட்டி முடிந்ததும், கண்ணீர் மல்க மெஸ்ஸியை அவரது அணி வீரர்கள் சிலர் மேலே தூக்கி வீசிப் பிடித்து மகிழ்ந்தனர்.

இந்த வெற்றி ஆர்ஜென்டினாவின் 15 வது கோபா அமெரிக்கா வெற்றியாகும். அமெரிக்கண்டத்திற்கான கால்பந்துபோட்டியான கோபா போட்டிகளில் 15 தடவைகள் கிண்ணங்களை வென்று உருகுவேயும், ஆர்ஜென்ரினாவும் முன்னணியில் உள்ளன.

No comments