ஜப்பானில் நிலச்சரிவு!! 20 பேரைக் காணவில்லை!!


மத்திய ஜப்பானில் பலத்த மழையைத் தொடர்ந்து அட்டாமி நகரில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 பேரைக் காணவில்லை.

சமூக ஊடகங்களில் வீடியோவில் ஒரு மலை உச்சியில் இருந்து நகரத்தின் ஊடாக கடல் நோக்கி கறுப்பு மண் சரிந்து வருவதைக் காட்டியது. பல வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது புதைக்கப்பட்டன.

கடலோர காவல்படையினரால் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்தார்.

ஒரு "பயங்கரமான ஒலி" கேட்டதாகவும், நிலச்சரிவு அதன் பாதையில் எல்லாவற்றையும் மூழ்கடித்ததால் தப்பி ஓடியதாகவும் ஒரு குடியிருப்பாளர் கூறினார்.

No comments