விவசாயிகள் சம்மேளன தலைவரை கைது செய்ய பணிப்பு!

 


நேற்றைய தினம் விவசாயிகள் தம் பக்கமென கூறிக்கொண்டிருந்த கோத்தபாய இன்று அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்

அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு முரணான வகையில் பதுளை மாவட்டத்தின்  பொரலந்தை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பெயரில் இவ்விருவரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உர விவகாரம் தொடர்பில் போராடிவரும் விவசாயிகளது குரல்களை முடக்கவே கைதுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. 


No comments