உடல் எடை குறைக்க வேண்டுமா இதைப் பொருத்துங்கள்!! நியூசிலாந்தில் கண்டுபிடிப்பு!


உடலின் எடையைக் குறைப்பதற்கு நியூலாந்தில் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் புதிய வழிமுறையைக் கண்டு பிடித்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்பை நியூசிலாந்தின் ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இப்புதிய வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் கீழ் தடைப்பற்களில் காந்தங்களைப் பூட்டுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என அவர்கள் நிரூபித்துள்ளனர்.

இவ்வாறு காந்தங்களை ஒருவரின் பற்களில் பொருத்துவதன் மூலம் குறைந்தது குறைந்தது கிட்டத்தட்ட 2 மில்லி மீற்றர் வாயைத் திறக்க உதவுகிறது. இதனால் திரவ உணவுகளை உண்ண முடிகிறது. ஆனால் பேச்சு மற்றும் சுவாசத்தை இப்புதிய வழிமுறை தடுக்கவில்லை.


பொருத்தப்பட்ட காந்தத்தினால் ஆன சாதனம் சாதாரண உணவுப் பழக்கத்திற்கு எதிராகச் செயற்படுகிறது. குறிப்பாக திடமான உணவுகளை உண்ண இவை தடுக்கும் நோக்கமாக அமைகின்றது.

குறித்த சாதனைம் பொருத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகளை் நடத்தப்பட்டன. சாரசரியாக இரண்டு வாரங்களில் 6.36 கிலோ கிராம் எடையை அவர்கள் இழந்துள்ளனர்.

குறிப்பாக இப்புதிய வழிமுறை எடையைக் குறைக்க தூண்டப்படகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments