ஏட்டிக்குப்போட்டி:படகோட்டிக்கு அச்சுறுத்தலாம்?



ஏட்டிக்குப்போட்டியாக சிறீதரன் குழு மற்றும் கஜேந்திரனட குழுவினரை கௌதாரிமுனையிலுள்ள சீன கடலட்டை பண்ணைக்கு ஏற்றிச்சென்ற படகோட்டி இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரனைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.

இதனிடையே இச்சம்பவத்திற்கு மீனவர்கள் கடும் கண்டனம், அச்சுறுத்தலுக்கு அடிபணியோம் எனவும் சூழுரைத்துள்ளதாக சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை அச்சப்படுத்தி அடக்குமுறைக்குள் அடக்கி வைப்பதற்கு முயற்சிக்கிறது இலங்கை அரசாங்கம் எனவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

கௌதாரிமுனையிலுள்ள சீன கடலட்டை பண்ணையை பார்வையிட சென்றிருந்த சுமந்திரன்,சிறீதரன் அணி பாதை தெரியாது வீதி சரியில்லையென திரும்பியிருந்தது.

எனினும் முன்னணியின் கஜேந்திரன் அணி படகில் சென்று தரையிறங்கி புகைப்படம் பிடித்து வெளியிட்டதுடன் பாதை தெரியாது திரும்பியதாக சுமந்திரன்,சிறீதரன் தரப்பினை நையாண்டி செய்திருந்தது.

இதனையடுத்து யாழ்.மாநகரசபை உறுப்பினர் வழிநடத்தலில் மீண்டும் முயற்சித்து சிறீதரன் குழு கௌதாரிமுனை சென்றிருந்தது.

இந்நிலையில் தற்போது சீன கடலட்டை பண்ணைக்கு ஏற்றிச்சென்ற படகோட்டி இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரனைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.




No comments