நெடுந்தீவு:மேலுமொரு மீனவரை காணோம்!மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை  நேற்று வரை கரைதிருப்பாத நிலையில் நெடுந்தீவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தை  சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்ற கடற்றொழிலாளியே நேற்று  காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்  இரவாகியும்  கரை திரும்பவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இரு மீனவர்கள் கடலில் காணாமல் போன நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றவர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த மீனவர் கரைதிரும்பாமையால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கடலுக்கு சென்றவர் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு உரிய  தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments