பருத்தித்துறை பகுதியாக முடக்கம்?

 


பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியை தனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


அந்தப் பகுதியில் இன்று சனிக்கிழமை எழுமாறாக 60 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.


அதனையடுத்து பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியினால் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், வடமாகாண சுகாதார சேவைகள் பணிபாளரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத் தெருவில் 53 குடும்பங்களை உள்ளடக்கிய பகுதி நாளை காலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments