ஊசி வாங்க கடன் வாங்கும் இலங்கை!

 


சீன தடுப்பூசிகளை வாங்குவதில் தலா 2 டொலர் சுருட்டிய இலங்கை தலைவர்கள்   ஊசி வாங்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனான பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நேற்று 33 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இதில் 19 ஆண்களும் 14 பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதுவரை இல்லாத அளவாக 02 மில்லியன் டோஸ்களை எடுக்க 02 விமானங்கள் சீனா பறந்தன.

இலங்கைக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய அளவாக கொவிட் -19 சினோபார்ம் தடுப்பூசிகளின் 2 மில்லியன் டோஸ்களை கொண்டு வருவதற்காக இரண்டு இலங்கை ஏர்லைன்ஸ் விமானங்கள் சீனாவுக்கு புறப்பட்டன. இரண்டு விமானங்களும் நாளை காலை திரும்பவுள்ளதாக என்று பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.


No comments