பாலுக்கும் காவல்:பூனைக்கும் தோழராம்!கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளார்.

இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

ஏற்கனவே வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற பாரிய மண் கொள்ளைகளை மகேஸ்வரி நிதியம் ஊடாக அரங்கேற்றியதாக டக்ளஸ் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments