வடக்கு கடலை விற்கவேண்டாம்!

 


வடக்கு கடலை கடலட்டை வளர்ப்பென தாரை வார்க்கவேண்டாமென மீனவ அமைப்புக்கள் டக்ளஸிடம் கோரியுள்ளன. 

கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி நக்டா தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதாகாரசபை அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற நிலையில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் பூநகரி, வலைப்பாடு கடற்றொழிலாளர்களுக்கான விண்ணப்பத்தின் அடிப்படையில், கடலட்டை பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பூநகரி, சங்குப்பிட்டி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதற்காக தம்மை சந்திக்க டக்ளஸ் பின்னடிப்பதாக கௌதாரிமுனை மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன் கடலை கடலட்டைக்கென தாரை வார்த்து தம்மை தற்கொலைக்கு தள்ளவேண்டாமெனவும் கோரியுள்ளனர்.


No comments