அட்டை வளர்ப்பின் நோக்கம் என்ன?மக்களைவிட அட்டை வளர்ப்பின் நோக்கம் என்ன அதிக அக்கறை செலுத்துகிறார் என்றால் இதிலே அமைச்சர் டக்ளசிற்கு பலன் கிடைக்க வேண்டும். இதெல்லாம் மக்களுக்கு செய்கின்ற பச்சை துரோகம் என்று வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.


யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கும் போது 2009 போர் ஓய்ந்த பின்னர் இன்றுவரையான காலப் பகுதியில் இந்திய இலுவைப் படகுகளின் எல்லைதாண்டி வருகின்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அவர்களினால் எமது வளங்கள் அழிக்கப்படுகிறது வாழ்வாதாரம் சூறையாடப்படுகிறது கைகலப்புகள் ஏற்படுகிறது. அதற்கப்பால் எமது தொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வை வேண்டி தொடர்ச்சியான பல போராட்டங்களை மேற்கொண்டு இந்திய மீனவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பல பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டும் இன்று வரையும் ஒரு முடிவும் எட்டவில்லை.


இந்த நிலையில் சீனாவின் மறைமுக ஆக்கிரமிப்பு தொடர்பாக விழிப்படைந்திருக்கிறோம் அரியாலையில் சீன நிறுவனமானது அட்டைக் குஞ்சு வளர்ப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்கு பலர் எதிர்ப்பு இருந்தாலும் அரசு ஆதரவாக இருக்கிறது. முக்கியமாக ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் இந்த நிறுவனத்தின் முகாமையாளராக இருக்கிறார். தமிழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல முறைப்பாடுகளை கொண்டு சென்றுள்ளோம். 


கடல் அமைச்சராக எவரும் வந்துவிடலாம் ஆனால் கடல் சம்பந்தமாக விடயங்களை ஓரளவு ஆவது புரிந்து கொண்டு அங்கே இருக்கின்ற கஷ்டங்கள்இ அங்கே இருக்கின்ற அபிவிருத்திகள் தொடர்பாக பேச வேண்டும். அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். 

வந்த அமைச்சர் பண்ணை வளர்ப்புகள் அதாவது இறால்இ நண்டுஇ அட்டை வளர்ப்புக்குள்ளே வந்துவிட்டார். 


போருக்கு முன்னரான காலப் பகுதியில் ஒட்டுமொத்தமான மீன்பிடியில் 47 வீதம் மீன்பிடி பங்களிப்பை வடபுலத்தில் செய்திருக்கிறோம்.அப்படியான மீன்பிடி இடத்தைவிட்டு கரையில் பண்ணை வளர்ப்பில் ஈடுபடுகிறார் டக்ளஷ் தேவானந்தா. அப்படியானால் கடல் வளத்தைப் பற்றி அவருக்கு தெரியாது என்றே நாம் கருதவேண்டி இருக்கிறது. 


55 வருடங்களுக்கு முன்னரே நாங்கள் 250 தொடக்கம் 400 வரையான அட்டைப் பண்ணைகளை உருவாக்கி இருக்கிறோம்.  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். ஆனால் அட்டை குஞ்சு வளர்ப்பை நாங்கள் செய்யவில்லை. அந்நிய செலாவணியை ஈட்டுகின்ற இந்த அட்டை குஞ்சு வளர்ப்பை அரசு எங்களுக்கு பழக்கி தொடர்ந்து செய்யக் கூடிய வாய்ப்பை எங்களுக்கு கொடுத்திருக்கலாம். சீனாவின் கையில் கொடுத்து எங்களை கூலிக்காரராக மாற்றி இருக்கிறது. அட்டைகுஞ்சு வளர்ப்பு தொடர்பில் தங்களுக்கு தெரியாது என்று சீன நிறுவனத்தை அமைச்சர் இங்கே நிறுவியுள்ளார். 


தமிழ் மக்கள் தொடர்பில் அமைச்சர் அக்கறை கொண்டிருந்தால் சீனா அள்ளிச் செல்லாத வரை எங்களுக்கு கிடைத்திருக்கச் செய்திருக்கலாம். இதைவிட்டு விட்டு மக்களை மிரட்டும் தொனியில் வார்த்தைகளை விட்டு வருகிறார். 


அட்டைப் பண்ணையை போட முடியாது நிறுத்துங்கள் என்று சொல்லியும் அதனை நீங்கள் சொல்ல முடியாது என்று மிரட்டும் தொனியில் பேசி வருகிறார். பெரும்பான்மை மக்களை கேட்டு தான் செய்திருப்பதாக கூறுகிறார். பெரும்பான்மை மக்கள் என்றால் அந்த ஊரில் உள்ளவர்கள் தான் பெரும்பான்மை மக்கள். தனக்கு தெரிந்தவர்களை கூட்டிக் கொண்டு போய் செய்திருக்கிறார் என்றார்.No comments