றிசாட்:சிறையிலும் நிம்மதியில்லை!பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீ காயங்களுக்கு உள்ளாகி மரணமான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி டயகம பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 15 ஆம் திகதி தீ காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டயகம பகுதியை சேர்ந்த 15 வயதுடைய ஹிசாலினி என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய குறித்த சிறுமியின் மரண விசாரணையில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்திருந்தது.

இந் நிலையில் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது டயகம மேற்கு தோட்டத்தில் ஆரம்பமாகி டயகம நகர் வரை இடம்பெற்றுள்ளது.

ஆர்பாட்டத்தில் ஈடுட்டவர்கள் உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டும், முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டாரிடம் உரிய விசாரணை முன்னெடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்த பதாதைகளை ஏந்தி இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments