வெற்றிகரமாக நிறைவடைந்து ஜெப் பெசோசுவின் விண்வெளிப் பயணம்


உலகின் முதலாவது பணக்காரரும், அமேசன் நிறுவனத்தின் நிறுவுனருமான ஜெப் பெசோசும் அவரது குழுவினர் அடங்கிய நால்வரும் வெண்வெளிக்குப் பயணித்து  வெற்றிகரமாகத் திரும்பியுள்ளனர்.

இன்று செவ்வாய்கிழமை அமெரிக்காவின் டெக்சாஸ் மாணத்தில் அமைந்துள்ள வான் ஹார்னுக்கு அருகில் உள்ள ஒரு தனியார் ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 9.15 மணிக்கு 'நியூ ஷெப்பர்டு' என்ற விண்கலம் பயணத்தைத் தொடங்கியது. விண்கலம் 100 கிலோ மீற்றர் வரை அது பறந்து சென்றிருந்தது. ரொக்கட்டிலிருந்து 2 நிமிடங்களில் காப்ஸ்யூல் தனியாகப் பிரிந்தது மேல்நோக்கிப் பறந்தது.காப்ஸ்யூலில் பில்லியனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), அவரது சகோதரர் மார்க் பெசோஸ் (Mark Bezos), 82 வயதுடைய மூதாட்டி வால்லி ஃபங்க் (Wally Funk), 18 வயதுடைய  நெதர்லாந்தைச் சேர்ந்த மாணவன் ஒலிவர் டெமென் (Oliver Daemen) ஆகியோர் விண்வெடிக்குப் பயணித்தனர்.விண்வெளியில் அவர்கள் புவியீர்ப்பு விசையற்ற நிலையில் மிதந்த நிலையை அவர்கள் உணர்ந்தனர்.முதலில் ஜெப் பெசோஸ் குழுவினரை விண்வெளிக்கு அனுப்பிய ரொக்கெட் முதலில் ஏவுதளத்துக்கு திரும்பியது. அதைத் தொடர்ந்து, பெசோஸ் உள்ளிட்ட நால்வரும் இருந்த, பாரசூட்டுடன் இணைக்கப்பட்ட ‘கேப்சூல்’, டெக்சாஸ் பாலைவனத்தில் பத்திரமாக தரையிறங்கியது. மொத்தம் 10 நிமிடங்கள், 20 வினாடிகளில் இந்த விண்வெளி பயணம் நிறைவு பெற்றது.விண்வெளிக்கு பயணம் செய்த மிக வயதானவர் என்ற பெருமையை வால்லி ஃபங்கும், மிக இளவயது நபர் என்ற புகழை ஒலிவர் டேமெனும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments