தப்பித்தார் கம்மன்பிலஇலங்கை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் 152  வாக்களித்தனர். பிரேரணைக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர் 61 வாக்களித்தனர்.

பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியுடன், எதிர்க்கட்சியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அண்மையில் எரிபொருள் விலையேற்றத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 44 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இரண்டு தினங்கள் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

No comments