கோப்பாயில் காவல்துறை கட்டுப்பாட்டினுள் இல்லையாம்!

 
பொதுமக்கள் மீது மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்துவிடுவது தொடர்பில் இலங்கை காவல்துறை மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.


யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் மீது கடந்த ஒரு வார காலப்பகுதியினுள் பொதுமக்களை தாக்கியதாக நான்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.  

நேற்றைய தினம் வீதியால் சென்ற தன்னை கோப்பாய் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் வாகனத்தில் கடத்தி சென்று , கைத்துப்பாக்கியால் தாக்கி , வீதியில் வீசிவிட்டு சென்றதாக இளைஞன் ஒருவர் முறையிட்டுள்ளான்.

இது தொடர்பில்  இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் முறைப்பாடு ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். 


No comments