யாழில் கர்ப்பிணிகளை தாக்கும் கொரோனா!

 


யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

தீவகப்பகுதியில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருவோர் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வார கால பகுதியில் 15 கர்ப்பிணி தாய்மார்களும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு , அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

No comments