சீனாவுக்குச் செல்கிறது 80 கிலோ எடைகொண்ட நீல நிற இரத்தினக்கல்!!


இரத்தினபுரி, இறக்குவானை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் நிறையுடன்  நீல நிறத்திலான இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த  இரத்தினக்கல்,  எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஏல விற்பனைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது. அந்த இரத்தினக்கல்லை அதன் உரிமையாளர், சிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையிடம் ஒப்படைத்துள்ளார்.

80 கிலோகிராம் நிறையைக் கொண்ட நீல நிற இரத்தினக்கல் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது என உரிமையாளர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இரத்தினபுரி கஹவத்தை பகுதியில் 510 கிலோகிராம் நிறையுடைய சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியாக நீல நிற இரத்தினக்கல் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கல்லின் பெறுமதி 2000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. எனினும், இரண்டொரு நாள்களின் பின்னர், அந்தக் கல் மதிப்பற்றது என தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments