ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் போக்குவரத்து!இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்;. 

இதனிடையே திருமண வைபவங்கள்; உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் இதன்போது சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments