சுயதனிமைச் சட்டம் பிரயோகிப்பது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவதாகும்: சர்வதேச மன்னிப்புச்சபை


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, இலங்கை அரசாங்கம் கருத்துச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை ஓர் கருவியாகப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

இது குறித்து ருவிட்டர் பக்கத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தொிவிக்கையில்:-

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, இலங்கை அரசாங்கம் கருத்துச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை ஓர் கருவியாகப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை வெளியிடுவதாக இருந்தால், எந்தவொரு தரப்பினரையும் அடக்குமுறைக்கு உட்படுத்தாத வகையில் அனைவருக்கும் பொதுவானதாக அவ்வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் என்று மன்னிப்புச்சபை அதன் டுவிட்டர் பதிவில் வலியுறுத்தியிருக்கின்றது.

No comments