தென்னிலங்கை போராட்டகாரர்கள் மானம் காத்த தமிழ் தரப்பு!மாற்று உடையின்றி திண்டாடிய போராட்டகாரர்களிற்கு உடைகள் கொடுத்து மானம் காத்துள்ளது தமிழ் தரப்பு.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் மகளிர் உட்பட கைது செய்யப்பட்ட 19 ஆசிரியர் சங்க உறுப்பினர்களிற்க்கும் மாற்று உடைகளை அரசியல் ஆய்வாளரும் சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம், யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ், க.விஸ்ணுகாந்,  ஆகியோர் நேரில் சென்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமான படை தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கி வைத்தனர்.

நேற்று முன்தினம் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட முலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்க உறுப்பினர்களே கேப்பாப்புலவு விமான படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

No comments