மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி கண்?
இலங்கை இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை மீள இயங்குநிலைக்கு கொண்டுவர அரசு மும்முரமாகியுள்ளது.

2009ம் ஆண்டிற்கு முன்னதாக யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, பலாலி இராணுவக் கட்டளை தலைமையகத்தில் வைத்து, இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, கொழும்பு இராணுவ தலைமையகத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில், கொழும்பு  இராணுவக் கட்டளை தலைமையகத்தில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு,  யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments