மக்கள் சக்தி போராட்டம்: கவிழ்க்க வேண்டாம் - பஸில்!இலங்கை அரசுக்கெதிராக ஒருபுறம் மக்கள் போராட்டங்கள் தொடர மறும் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று காலை நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்கவேண்டாமென எதிர்கட்சிகளிடம்  ஏற்கனவே பஸில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே எரிபொருள் விலையை உயர்த்திய கம்மன்பிலவை வெளியேற்றுவோம். நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம். எனும் கருப்பெருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று (19) காலை நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கியதோடு ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே துமிந்தவிற்கு பொதுமன்னிப்பளித்த விவகாரம் தென்னிலங்கையினை சீற்றமடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments