இலங்கையில் கிணத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இரத்தினக்கல்!

மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் (star sapphire cluster) கொத்தணியொன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஏறக்குறைய 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) நிறையுடையது என்றும், இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணய பெறுமதியில் 20 பில்லியன் ரூபா) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரியிலுள்ள வீடொன்றுக்கு பின்புறமாக கிணறு தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த நீலக் கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments