அடுத்த இடி:வடக்கில் கடற்கரைகள் போகின்றன


வடக்கின் பெருமளவு நிலப்பரப்பை உள்ளடக்கியவகையில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி கைச்சாத்திடப்படவுள்ளது.

2009இன் பின்னராக வன்னியில் பெருமளவு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் 5,000 ஏக்கர் சதுப்பு நிலம் இன்னும் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் 12,000 ஹெக்டயார் சதுப்புநிலம் காணப்படுகின்றது. அதில் 80 சதவீதமானவை அழிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளர்.


No comments