வாழ்த்தினார் சீ.வீ.கே!நெருக்கடிகள் மத்தியில் வடமாகாணசபை பிரதம செயலாளர் கடமைகளை பொறுப்பேற்ற அ.பத்திநாதனை வாழ்த்தியுள்ளார் அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

கடந்த 6 வருடங்கள் 6 மாத காலமாக வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக சிறப்புற சேவையாற்றிய அ.பத்திநாதன் அவர்களை அவரது அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பொன்னாடை போர்த்தி பாராட்டி,  வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

முன்னாள் பிரதம செயலாளர் ஆளுநரதும் கொழும்பு அரசினதும் கட்டுப்பாட்டினில் இருந்த போதும் அதனை தாண்டி சி.வி.விக்கினேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தவர் அ.பத்திநாதர் என்பது குறிப்பிடத்தக்கது.  


No comments