டெல்டாவை விட கொடியது உருமாறிய லாம்ப்டா வைரஸ்!!


கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், லாம்ப்டா (Lambda)என்ற வைரஸ் அதிக பாதிப்பை உண்டாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் உருமாற்றம் அடைந்ததாக கூறப்படும் டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் ஏராளமான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் உலகிற்கே அச்சுறுத்தல் என உலக சுகாதார மையமே எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்போது லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரஸை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாம்.

இந்நிலையில் லாம்ப்டா என்ற வைரஸ்  பெரு நாட்டில் முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என இங்கிலாந்து சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

No comments