யாழ்.அரியாலையில் துப்பாக்கிச்சூடு!

 யாழ்.நகரின் புறநகர்பகுதியான அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தின் மீது இலங்கை காவல்துறையால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உழவு இயந்திரத்தின் ரயர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.

இன்று அதிகாலை சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தினை கடமையில் இருந்த காவல்துறையினர்; மறித்த போது வாகனம் நிறுத்தாது சென்றுள்ளது.

இதன் காரணமாக உழவு இயந்திரத்தின் சில்லுபகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் அரியாலை பகுதியில் நடத்தப்பட்ட மூன்றாவது துப்பாக்கி சூட்டு சம்பவமிதுவாகும்.


No comments