ஆக்கிரமிப்பு மீனவர்களிற்காக அனுதாபத்தில் டக்ளஸ்!முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் ஆக்கிரமித்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளாராம்.

மேலும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறு வெளி மாவட்ட கடறறொழிலாளர்ளினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்hம்.

தமிழ் தாயக கடற்பரப்பினை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்கள் தொடர்பிலேயே டக்ளஸ் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


No comments