கட்டாரிலிருந்து திருப்பப்பட்ட தமிழர் கைது!

தமிழீழ விடுதலைப்புலிகளை ஊக்குவித்த சந்தேகத்தின் பேரில் கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர்  தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் முல்லைத்தீவுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர் 41 வயதான திருகோணமலை பகுதியில் வசிப்பவர் எனவும் குறித்த நபர் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறுகள், ஒளிப்படங்கள் ஆகியவற்றை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் தமிழீழ விடுதலைப்புலிகளை ஊக்குவித்த சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments