வீட்டு திட்ட மோசடி:பங்காளிகள் மீது குற்றச்சாட்டு!வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக காசிலிங்கம் கீதநாத் மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் தென்மராட்சிப் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வீட்டு வசதி இல்லாமல் இருக்கும் குடும்பங்களின் வீட்டு திட்டத்திட்ட பெயர் பட்டியலை நீக்கிவிட்டு தங்களுடைய கட்சி ஆதரவாளர்களுக்கும் தங்களுக்கு நெருங்கியவர்களுக்கும் வீட்டுத்திட்டத்தில் போடும்படி அரச திணைக்களங்களில் பயமுறுத்தி பெயர் பட்டியல் மாற்றப்பட்டதாக ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் கொழும்பு வரை சென்றதையடுத்து மீளாய்வு செய்ய பிரதிநிதியொருவரை அனுப்பியதையடுத்து ஆதரவாளர்களது குடும்பங்களுக்கு வீட்டுதிட்டம் வழங்கும்படி அழுத்தம் வழங்கப்பட்டது அம்பலமாகியது.

இந்நிலையிலேயே பங்காளிக்கட்சிகளை தாண்டி  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக காசிலிங்கம் கீதநாத் மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments