இலங்கை வான்பரப்பில் தடையில்லையாம்!இலங்கை வான்பரப்பைப் பயன்படுத்த இந்தியாவிற்கு மறுப்பு தெரிவிக்கப்படவிலலையென கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வான்பரப்பைப் பயன்படுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் உண்மை இல்லை என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது நாடொன்றுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை வான்பரப்பை பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கைகளும் அண்மைய காலங்களில் இந்தியாவால் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கை அரசு இச்செய்தி பற்றி வாயே திறந்திருக்காத நிலையில் சீன அரசு இலங்கை வான்பரப்பினை பாதுகாக்க உதவ முன்வந்துள்ளது.


No comments