முல்லையில் குண்டுவெடிப்பு!


முல்லைத்தீவு - சாலை பகுதியில், இன்று (27) காலை, விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், வெடிபொருள் வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.

கரைதுறைப்பற்று ,அம்பலவன்பொக்கணையை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தரே, இவ்வாறு காயமடைந்துள்ளார்.

குறித்த நபர், தனது மனைவி, மகனுடன், சாலை  பகுதியில் அமைந்திருக்கும் நீரேரிக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, நீரேரிக்கு அருகில், மனைவியும் மகனும் உப்பு  அள்ளிக் கொண்டிருந்த நிலையில், குறித்த நபர்  அருகில் உள்ள பற்றைக்காடுகளில் விறகு வெட்டிக்கொண்டிருந்தார்.

இதன்போது, மரத்தடியில் இருந்த வெடிபொருள் ஒன்று, கோடரி பட்டதில் வெடித்துள்ளது.

இதில் காயமடைந்த குடும்பஸ்தர், புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்No comments