ஆயுதமுனையில் 150 பள்ளி மாணவர்கள் கடத்தல்!


நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க வந்த மாணவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. கடத்தப்பட்டவர்களில் இதுவரை ஒரு பெண் ஆசிரியர் உள்பட 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் 150 பள்ளிக்குழந்தைகள் சிறைபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனையறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியின் முன் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments