4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்!!


முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந்த கொள்ளையர்கள் நால்வர், நேற்று  (19), கிராம வாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு, புதுக்குடியிருப்பு காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், 17,18 வயதுகளையுடையவர்கள் எனவும் இவர்கள், விசுவமடு குமாரசாமிபுரம், வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், இளங்கோபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சிறுவர்கள் நால்வரும், விசுவமடு மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில், நேற்று (19) அதிகாலை, திருட முற்பட்ட போதே, கிராம மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித் சிறுவர்கள், மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments