கோத்தா:சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை!


தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையென்ற பரபரப்பின் மத்தியில் கொலை குற்றச்சாட்டில்  குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண  தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவுக்கு கோத்தபாயவால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

"சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வா, ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்" என்று சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாரத லக்சமன் பிரேமசந்திர கொலை சம்பவத்தில் குற்றவாளியான இனங்காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையென்ற நாடகத்தை அரங்கேற்றியிருந்த நிலையில் சத்தம் சந்தடியின்றி கோத்தபாயவின் பழைய நண்பரான துமிந்த விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் கோத்தாவினால் அரங்கேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களது கடத்தல் மற்றும் காணாமல் ஆக்குதல்களை அரங்கேற்றிய பாதாள உலக கும்பலை துமிந்தவே வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments