தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! அநுராதபுரத்தில 15 பேர்!! யாழில் ஒருவர்!!

இலங்கை அரசின் யுத்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறை அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொது

மன்னிப்பு வழங்கும் அறிவிப்பின் கீழ் யாழ்.சிறையிலிருந்து அரசியல்; கைதியொருவர் காலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை  அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரும் இவ்வாறு விடுவிக்கப்பட சாத்தியங்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 16 அரசியல் கைதிகள், இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு பூராகவுமுள்ள சிறைகளிலிருந்து 93 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments