நாகர்கோவிலில் 96 கிலோ கேரள கஞ்சா மீட்பு


யாழ்ப்பாணம், நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் இன்று (7) கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, 96 கிலோ கேரள கஞ்சா

கைப்பற்றப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினரால், நாகர்கோவில் பிரதேசத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போது, 3 மூடைகளிலிருந்து மேற்படி கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி சுமார் 2.8 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார விதிமுறைகளுக்கமைய, கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்த கேரள கஞ்சா மூடைகள், கடற்படையினரின் கண்காணிப்பில் வடக்கு கடற்படை கட்டளைப்பிரிவில் தீ வைத்து அளிக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments