முன்னேற்றமில்லை:ஊரடங்கு வரலாம்!



பயணத்தடையை பொதுமக்கள் அலட்சியம் செய்தால் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்துவதை தவிர வேறுவழி இல்லை என இலங்கை அரசாங்கத்தரப்புக்கு மருத்துவ தரப்புக்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாசிய பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ள விசேட செயற்திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியல் திஸ்ஸ விதாரண அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுலில் உள்ள பயணத்தடையினால் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அங்காடி விற்பனை ஊடாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் அதனை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதி பெரும்பாலான மக்களிடம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


No comments