2 நாட்களின் பின் நீந்திக் கரை சேர்ந்த காணாமல்போன மீனவர்!!


இரண்டு நாட்களாக காணமால்போயிருந்த மீனவரொருவர் நடுக்கடலிலிருந்து 30 கிலோ மீற்றர் தூரம் வரையில் நீந்தி மன்னார் கடற்கரைக்கு வந்து தப்பித்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த டிலான் கொஸ்தா எனப்படும் இந்த மீனவர், மேலும் 10 மீனவர்களுடன் மீன்பிடிக்காக படகு மூலம் கடந்த 10 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்றுள்ளனர். 

படகில், இயந்திர கோளாறு ஏற்படவே அவர்கள் கடலில் விழுந்துள்ளனர். எனினும், அவர்களில் இரண்டு பேர் மாத்திரம் படகில் ஏறி எப்படியாவது தத்தளித்து மீண்டும் கரைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2 நாட்களாக காணமால் போயிருந்த  மன்னார் கடற்கரைக்கு நீந்தி வந்த டிலான் கொஸ்தா எனும் மீனவரின் உடல்நிலை சரியில்லாததால் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்த மூவருடன் சென்ற ஏனைய மீனவர்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

No comments