நீதி கேட்டலைந்த மற்றொரு தாயாரும் பிரிந்தார்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த மற்றொரு தாயாரும் மரணித்துள்ளார்.

2009 இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட  வடபோர்முனை போர்ப்பயிற்சி ஆசிரியர் செஞ்சுடர் மாஸ்டரின் தாயாரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேராவின் தாயாருமான தேவகி , புற்றுநோய் தாக்கம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று சாவடைந்துள்ளார். 

சிறீலங்கா அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகவை கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தேடியலைந்து மகன் பற்றிய நம்பகமான சேதி அறியாமலும், நீதி மறுக்கப்பட்ட நிலையிலும் மரணித்த தாயார்களுள் அவரும் ஒருவராகியிருக்கின்றார்.


No comments