வீடுகளில் கொள்ளையடிக்கும் திருடன் அகப்பட்டான்! பொருட்களும் மீட்பு!!


யாழ்ப்பாணம் இளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில்  ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உட்பட்ட கொள்ளையிடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் சில்லாலையைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

No comments