கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை:பிராந்தி என்கிறார் சரவணபவன்!


கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் திடீர் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி காரணமல்ல என்றும் மன பிராந்தி காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் மதியத்தின் பின்னராகவெ கொரோனா தாக்குவதாக வக்காலத்து வாங்கிய கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவNpன தற்போது புதிய வியாக்கியானத்துடன் களமிறங்கியுள்ளார்.

இதனிடையே நோய்வாய்ப்பட்டவர்கள் அனைவரும் சில நேரங்களில் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது அதேபோல் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரோ குறித்த ஊசி விநியோகத்திற்கும் தமக்கும் தொடர்பில்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments